அரசாங்க தகவல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! பாராளுமன்றம் கலைப்பு!

0

பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அராசங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு தயாராகுவதாக உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு தற்பொழுது சில திட்டமிட்ட குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் உண்மைக்கு புறப்பான மற்றும் அடிப்படையற்ற இந்த பிரச்சாரத்தை முற்றிலும் நிராகரிப்பதாக அரசாங்கம் இதன் மூலம் அறிவுத்துகின்றது.” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article‘வீணாகிறதே’ என்று சாப்பிட்டால் வீணாகிவிடும் உடம்பு!
Next articleமெரினா கடற்கரையில் இறந்து கிடந்த இளம்பெண் தொடர்பாக வெளிவந்த திடுக்கிடும் தகவல்!