Home Patti Vaithiyam இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்கணுமா? அப்போ இப்படி டீயை தயாரித்து குடியுங்க!

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்கணுமா? அப்போ இப்படி டீயை தயாரித்து குடியுங்க!

0
2231

உடல் எடையை குறைக்கும் முயற்சிகளை இன்று பலரும் பின்பற்றி வருகின்றார்கள்.

அந்த வகையில் பார்க்கும் போது, நம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை கொண்டு இடுப்பளவை குறைக்கும் சூப்பரான டீயை தயாரிக்கலாம்.

எனவே அந்த டீயை தயாரிக்க என்னென்ன பொருட்கள் வேண்டும் அதை எப்படி தயாரிப்பது என்று பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 800மி.லி

கிரீன்டீ பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1 துண்டு

பிரியாணி இலை – 3

தேன் – தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் கொதிக்க வைத்த அந்த தண்ணீரில் பட்டை, பிரியாணி இலை, கிரீன் டீ பவுடர் அகியவற்றை ஒன்றாகச் சேர்த்து போட்டு 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

பின் அந்த டீயில் தேவையான அளவு தேன் கலந்து கொள்ள வேண்டும்.

டீயின் பயன்கள்
நமது உடலின் மெட்டாலிபாசத்தை அதிகரிக்கச் செய்யும் மசாலப் பொருட்கள் அனைத்தும் இந்த டீயில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இந்த டீயானது நமது உடம்பில் அதிகமான கலோரிகளைக் குறைத்து, செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.

இந்த டீயை ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் குடித்து வந்தால், நமது உடம்பின் இடுப்பளவும், அதிகப்படியான உடல் எடையையும் வேகமாக குறைக்கிறது.

குறிப்பு
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள், பெருங்குடல் பிரச்சனை உள்ளவர்கள் ஆகிய அனைவரும் இந்த டீயை குடிக்கவே கூடாது.

Previous articleஇந்த 3 ராசிக்காரர்கள் தான் ரொம்ப ரொமாண்டிக்கானவர்களாம்.. நீங்க எந்த ராசி!
Next articleபுழுக்கள் உருவாகும் வரை மாற்றப்படாத டயப்பர், இறந்து கிடந்த குழந்தை! கவனிக்காத பெற்றோர்!