வளிமண்டலவியல் குழப்பநிலைமை காரணமாக நாளை முதல் கூடுதலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற் பிராந்தியங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்வற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: