Home Jaffna News இலங்கை சென்ற இவர் வயிற்றில் 90 லட்சம் பெறுமதியான பொருட்கள் சிக்கின!! யார் தெரியுமா??

இலங்கை சென்ற இவர் வயிற்றில் 90 லட்சம் பெறுமதியான பொருட்கள் சிக்கின!! யார் தெரியுமா??

0
566

நேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள ஹெரோயின்

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நோபாள பிரஜையினால் விழுங்கப்பட்டிருந்த 90 ஹெரோயின் குளிசைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை குளிசைகளாக விழுங்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள பாரியளவான ஹெரோயின் தொகை இதுவென கருதப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள ஹெரோயினின் பெறுமதி 90 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரொன நேபாள பிரஜை, கடந்த மாதம் 30 ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த போதே கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் தொடர்ந்தும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Previous articleநேற்று யாழில் இடம் பெற்ற மகள் படுகொலை! தாய் படுகாயத்தின் பின்னர் வெளியான பகீர்த் தகவல்..!
Next articleசிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவரா? விட்டதை பிடிக்க சம்மதிப்பாரா!