Home thatstamil one india tamil oneindia tamil கொந்தளிப்பில் மக்கள்! படத்தின் ப்ரமோஷனுக்காக இப்படியா செய்வது!

கொந்தளிப்பில் மக்கள்! படத்தின் ப்ரமோஷனுக்காக இப்படியா செய்வது!

0
456

சாதாரணமாக ஒரு படத்திற்கு விளம்பரம் செய்யவேண்டும் என்றாலே பலரும் பல விதமான முறைகளை கையாள்வதுண்டு. ஆனால் பிஹு என்கிற ஹிந்தி படத்தின் படக்குழு செய்துள்ள ப்ரோமோஷன் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரைலரில் ஒரு 2 வயது குழந்தை யாருடைய உதவியும் இன்றி வீட்டில் தனியாக இருந்தால் என்னவெல்லாம் பிரச்சனை வரும் என்று காட்டியிருந்தார்கள்.

இந்த ட்ரைலரை விளம்பரப்படுத்த ரசிகர்கள் பலரின் மொபைலுக்கு ஒரு கால் வந்துள்ளது. அதில் ஒரு பெண் குழந்தை கதறுவது போல சத்தம் வந்துள்ளது. உடனே கால் கட் ஆகிவிடும். பதறிப்போன அனைவரும் மீண்டும் அந்த நம்பருக்கு கால் செய்தால், பிஹு படத்தின் ட்ரைலர் அவர்களுக்கு மெசேஜில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக இவ்வளவு கேவலமாகவா அனைவரையும் பீதி அடையும் அளவுக்கு செய்வது என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

Previous articleஇதுதான் உண்மை! பெண் பிரபலம் வெளியிட்ட தகவல்! சின்மயி குறித்து சொல்கிறேன்!
Next articleஇரண்டு மகள்கள் இருக்கும் நடிகைக்கு 42 வயதில் வந்துள்ள புதிய காதல்!