Home thatstamil one india tamil oneindia tamil நேர்ந்த விபரீத சம்பவம்! ஆண்மை குறைப்பாட்டை மறைத்து பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

நேர்ந்த விபரீத சம்பவம்! ஆண்மை குறைப்பாட்டை மறைத்து பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

0
358

தமிழகத்தில் ஆண்மை இல்லாத பிரச்னையை மறைத்து திருமணம் செய்து, மனைவியை மோசமாக கொடுமைப்படுத்திய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஹசினாபேகம் (22). இவருக்கும் பாதுஷா (27) என்பவருக்கும், ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் பாதுஷாவுக்கு ஆண்மை இல்லாத பிரச்சனை இருப்பதும், அதை மறைத்து அவர் தன்னை மணந்ததும் ஹசினாவுக்கு தெரியவந்தது.

இதனால் விரக்தியடைந்த ஹசினா இது குறித்து கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து பாதுஷாவும், அவர் குடும்பத்தாரும் ஹசினாவை மோசமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

கொடுமை தாங்காத அவர் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசிடம் பாதுஷா, அவர் தந்தை சையத் கான், தாய் சைபூன், சகோதரி ஜெசிமா பேகம் மீது புகார் கொடுத்தனர்.

இதையறிந்த அவர்கள் தலைமறைவான நிலையில் பொலிசார் தேடி வருகிறார்கள்.

Previous articleபாதத்தின் அழகை கெடுக்கும் கருமையை போக்க சில டிப்ஸ்.
Next articleபிக்பாஸ் 2 போட்டியாளர்கள்! புதிய படத்தில் ஜோடிசேரும் இருவர்!