கொலை அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர்!

0

காஞ்சிரமோட்டையில் குடியேறும் மக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் வன இலாகா திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இடையூறுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியாவிற்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்திருந்த மக்கள் தற்போது மீளக்குடியேறி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் காஞ்சிரமோட்டையில் வனவளத்திணைக்களம் அப்பகுதி மக்களிற்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்து வருகின்னர்.

மீள்குடியேறிய அம்மக்கள் வீடுகளை கூட அமைக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்திலும் முடிவுகள் எட்டப்படுகின்ற நிலையிலும் கூட அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைக்கு ஜனாதிபதியின் இணைப்பாளரும், அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவருமான நபரே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பாக இந்த பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுத்து ஜனாதிபதிக்கு இவ்வாறான நபர்களின் ஊடாக இங்கு எவ்வித வேலைத்திட்டமும் செய்ய முடியாது எனவும் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறான திட்டங்களை முன்னெடுப்பத்தில் சிக்கல் உள்ளதாகவும் எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் பாரிய விபத்து தவிர்ப்பு! ஒரே பாதையில் நேர் எதிரே வந்த ரயில்கள்!
Next articleசூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமி! கருப்பு பொட்டு வெக்காதடி! தீயாய் பரவும் புதிய பாடல்!