யாழில் பாரிய விபத்து தவிர்ப்பு! ஒரே பாதையில் நேர் எதிரே வந்த ரயில்கள்!

0

யாழில் ஒரே பாதையில் நேர் எதிரே வந்த ரயில்களினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து அதிகாரிகளின் சாதுரிய நடவடிக்கையினால் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலும், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி ரயிலும் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேர் எதிரே வந்துள்ளது.

அதனை அறிந்த புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இரு ரயிலையும் நிறுத்தியுள்ளனர். பின்னர் கொழும்பில் இருந்து வந்த ரயில் தடம் மாற்றப்பட்டு பயணத்தை தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸ் பிரபலத்தின் ஓபன் டாக்! சிம்பு பெட்ரூமிற்கு சென்ற போது அவர் என்ன தூக்கி சுற்றினார்!
Next articleகொலை அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதியின் இணைப்பாளர்!