பூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அறிவது எப்படி!

0

பூனையை எப்போதுமே நாம் ஒரு அபசகுனமாக தான் பார்த்து வருகிறோம். பேய் படங்களில் பூனையை தீய சக்தியாக பார்ப்பது, பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என கூறுவது என பல விஷயங்கள் இப்படியாக கூறலாம்.

உண்மையில் பூனை குறுக்கே வந்தால் அந்த வழியில் போகக் கூடாது என்ற சொல்லாடலின் பொருளே வேறு. பூனை என்பது பெரும்பாலும் மக்கள் வாழ்விடத்தில் வாழும் வீட்டு விலங்கு. அரச காலங்களில் மக்கள் வாழ்விடத்தில் போரிட மாட்டார்கள். போர் தொடுக்க செல்லும் பாதையில் பூனை குறுக்கே வந்தால், அவ்விடத்தில் மக்கள் வாழ்விடம் இருக்கலாம் என கருதி வேறு வழியில் செல்வார்களாம்.

இந்த வழக்கம் தான் பின்னாளில், பூனை குறுக்கே வந்தால், அந்த வழி செல்லக் கூடாது என அபசகுனமாக மாறியது. சரி இது ஒருபுறம் இருக்க… பூனையை பேய் படங்களில், திகில் படங்களில் அச்சுறுத்தும் வகையில் காண்பிப்பதை நாம் பலமுறைக் கண்டிருப்போம்.

பூனைகள் வீட்டில் தீய சக்தி தாக்கம் வராமல் தடுக்கும், தீய சக்திகள் குறித்து அறிகுறிகளை காட்டும் என்றும் கூறுகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை. இதுக்குறித்த சில தகவல்கள் இந்த தொகுப்பில் காணலாம்…

எதிர்மறை சக்தி!

கொஞ்சம் நினைவுக் கூர்ந்து யோசித்து பாருங்கள். என்றாவது உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பூனை, ஏதேனும் வெற்றிடம் அல்லது ஆட்களே இல்லாத இடத்தை உற்றுநோக்கி கொண்டிருப்பதை பார்த்துள்ளீர்களா? அல்லது தொடர்ந்து வீட்டின் எதாவது ஒரு பகுதியை, இடத்தை சந்தேகத்திற்கிடமாக எதையோ பார்த்துக் கொண்டிருப்பது போன்ற அதன் பாவனையை கவனித்தது உண்டா?

பாதுகாப்பு!

பூனையின் இப்படியான செயல்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாம். மேலும், அது பேய், தீய சக்திகளிடம் இருந்து உங்களையும், உங்கள் வீட்டையும் காக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும், பூனைகளால் தீய சக்திகளை எதிர்கொண்டு தாங்கும் திறன் இருக்கிறது என்றும். இது, கெட்ட சக்திகளை துரத்தி விரட்டும் என்றும் கூறப்படுகிறது.

அன்பிற்குரியவர்கள்!

மேலும், வீட்டில் வளர்க்கும் பூனைகள் தங்கள் எஜமானர்கள், அன்பிற்குரியவர்களை தனது இந்த திறன் மூலம் கெட்ட சக்திகளிடம் இருந்து பாதுகாத்து, வீட்டுக்குள் அந்த சக்திகள் அண்டாமல் பார்த்துக் கொள்ளுமாம்.

நுட்பமானது!

பூனை தீய சக்திகளை கண்டறிவதில் நுட்பமானது என்றும். இது தீய சக்திகள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றையும், அவற்றின் சுற்றுசூழலையும் விரட்டும், அவ்விடத்தில் இருந்து நீக்கும் என்கிறார்கள்.

உடனே வெளிப்படுத்தும்!

ஒருவேளை வீட்டுக்குள் ஏதேனும் தீய சக்தி தாக்கம் இருந்தால், பூனை வீட்டுக்குள் சென்ற சில நிமிடத்தில் அதை வெளிப்படுத்தும் என்கிறார்கள். அதை பூனையின் செயல்களை வைத்து கண்டறிகிறார்கள்.

எப்படி வெளியேற்றுவது?

செல்லப் பிராணியான பூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. உங்கள் வீட்டில் வளரும் பூனை, ஏதேனும் ஒரு மூளை அல்லது பகுதியில் அதிக நாட்டம் செலுத்துகிறது எனில், அந்த இடத்தில் பூஜைகள் செய்து வந்தால், உங்கள் குடும்பம் சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்கள் பின்பற்றி வந்தால் கெட்ட சக்தியை வீட்டில் இருந்து நீக்கலாம்.

சாபம் மற்றும் தீய கண்கள்!

கெட்ட சக்திகளிடம் இருந்து மட்டுமின்றி, பிறரது சாபம் மட்டும் கெட்ட பார்வையில் இருந்தும் பூனை, நம்மையும், நமது வீட்டையும் பாதுகாக்குமாம். மேலும், முக்கிய நிகழ்வுகளின் போது, நம்மை சுற்றி சோகமான சூழல் உருவாகும் போது அதில் இருந்து சீக்கிரம் மீண்டு வர பூனையின் இந்த திறன் உதவுமாம். இதற்கு எல்லாம் காரணம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்தியை பூனை அகற்றுவது தானாம்.

கருப்பு!

கருப்பு நிற பூனைகள் அமானுஷ்ய சக்திகள் மற்றும் சாபங்களில் இருந்து தனது தன்மை மற்றும் திறன் கொண்டு காப்பாற்றுமாம். இந்த கருப்பு நிற பூனைகளிடம் எதிர்மறை சக்தியை அகற்றும் திறன் மிகையாக இருக்கிறதாம்.

கருப்பு, வெள்ளை, சிவப்பு!

கருப்பு, வெள்ளை, சிவப்பு, போன்ற பல நிறக் கலப்புடைய பூனைகள், கெட்டவை நடக்காமல், தீய சக்தி நம்மை அண்டாமல் பாதுகாக்குமாம். இந்த மூன்று நிற கலப்பு கொண்ட பூனை வீட்டுக்கு அதிர்ஷ்டம் மற்றும் வளம் அதிகரிக்க செய்யுமாம்.

நீல, சாம்பல் நிறம்!

வீட்டில் அன்பும், நல்ல உணர்வுகளும் பரவ செய்யும் திறன் கொண்டதாம் இந்த நீல அல்லது சாம்பல் நிற பூனைகள். சாந்தமான திறன் கொண்ட சாம்பல் நிற பூனைகள் தான் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் அதிகரிக்க செய்யுமாம்.

சயாமீஸ் பூனை!

இந்த வகை பூனைகள் தாய்லாந்தில் அதிகம். இவை விளையாட்டு குணம் அதிகம் கொண்டவை. இது தனது எஜமானர்களுக்கு புகழும், வெற்றியும், நீண்ட ஆயுளும் அதிகரிக்க செய்யுமாம்.

இருநிற பூனை!

சாம்பல் – வெள்ளை கலப்பு போல இருநிற கலப்பு கொண்ட பூனையானது பொதுவான பூனைகளின் எதிர்மறை சக்தி கண்டறியும் திறனுடன் ஞானமும், பொது அறிவும் கொண்டிருக்குமாம்.

ஆமைக் கூடு நிறம்!

ஆமை கூடுனை போல கலப்பு நிறம் கொண்ட பூனையானது ஞானதிருஷ்டி திறன் எல்லாம் இருக்கிறதாம். இதன் முன் கெட்டவை நடக்கும் முன்னரே தனது செயல்கள் மூலம் அறிகுறிகள் வெளிப்படுத்துமாம். இந்த நிறத்திலான பூனைகள் பெரும்பாலும் பெண் பூனைகளாக தான் இருக்கும். இவற்றின் சக்தி மிகவும் தூய்மையானவை என்று கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில விசித்திரமான வைத்தியங்கள்!
Next articleஉங்களுக்கு ஆண் குழந்தை இருக்கா! நீங்க முதல்ல சொல்லி தர்ற விஷயம் இதுவாத்தான் இருக்கணும்!