சமூக வலைதளங்களில் ஜூலியின் புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
நடிகை ஜூலி படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், லண்டன் ரசிகர்களினால் அவருக்கு தமிழச்சி என்று புகைப்படத்துடன் பெயர் அச்சடிக்கப்பட்ட டிசட் ஒன்று பரிசளிக்கப் பட்டுள்ளது.
அதனை சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். நடிகை ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டார்.
எனினும், விமர்சித்த நெட்டிசன்கள் பலர் மத்தியில் இன்று அவரின் திறமையால் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விஜய். இவர் செய்யும் உதவிகளால் எத்தனையோ குடும்பம் சந்தோஷமாக வாழ்கிறது என்று கண்டிப்பாக கூறலாம்.
அப்படி விஜய் யாருக்கும் தெரியாமல் செய்த உதவியை வெளியே கூறியுள்ளார் தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த்.
அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், விஜய் அவர்களை சந்தித்துள்ளேன், மிகவும் அமைதியானவர். ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் செந்தில்நாதன் என்பவருக்கு கண் பார்வை கிடையாது, எப்போதும் பத்ரி பத்ரி என கூப்பிட்டுக் கொண்டிருப்பார்.
அவரது நிகழ்ச்சியை பார்த்த விஜய் அவரை அழைத்திருந்தார், அவருடன் நானும் சென்றிருந்தேன். பணம், I-Pod போன்றவற்றை கொடுத்து இதை தொலைக்காட்சியில் எல்லாம் சொல்ல கூடாது என்று கூறியிருந்தார் என்றார்.





