Home Jaffna News இராணுவ அதிகாரி கைது! எக்னெலிகொட கடத்தல் விவகாரம்!

இராணுவ அதிகாரி கைது! எக்னெலிகொட கடத்தல் விவகாரம்!

0
398

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ கேணல் ஒருவரை குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

எக்னெலிகொட கடத்தல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக நேற்றிரவு குறித்த இராணுவ கேணல், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்கு மூலம் பதிவு செய்து கொண்டதன் பின்னர் குறித்த இராணுவ லெப்டினன் கேணலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரன்த பீரிஸ் என்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவின் லெப்டினன் கேணல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleபிரபல நடிகை சூசன் பிரபல நடிகரிடம் அடி வாங்கினார்! விஷயம் இதுதான்!
Next articleவசீம்தாஜூடீன் சிரந்தி ராஜபக்சவின் நிறுவன வாகனத்தில் கடத்தப்பட்டார்?