பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியைக்கு ’ஐ லவ் யூ’ என தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்துள்ளான். மேலும் ஆபாச படங்களையும் வகுப்பறையில் பார்த்து வந்துள்ளான்.
‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை சொல்லவே தயக்கமாகவும், வெட்கப்பட்ட காலம் முன்பு இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் சகஜமான வார்த்தையாக ஒன்றாகிவிட்டதுபோய், அதை பாடம் சொல்லி தரும் டீச்சருக்கே சொல்லும் அவலம் வந்துவிட்டது.
வேலூர் மாவட்டம் கல்லப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வழக்கம்போல் பிளஸ்டூ வகுப்பு ஒன்றில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். ஆனால் ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனிக்காத மாணவன் ஒருவன், தன்னுடைய செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான்.
கல்வி அதிகாரிகள்
இப்படி ஆபாச படம் பார்த்து கொண்டிருப்பதை பார்த்த மற்ற மாணவர்கள் உடனே ஆசிரியரிடம் இதை பற்றி சொன்னார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், மாணவனை அழைத்து விசாரித்தார். உடனே மாணவனும், தான் ஆபாச படம் பார்த்ததை ஒப்பு கொண்டான். இதையடுத்து வகுப்பறையிலேயே, ஆசிரியர் இருக்கும்போதே இப்படி ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் மாணவன் ஆபாச படம் பார்த்தது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
சக மாணவிகளை ஆபாச படம்
இந்த மாணவன் தன் பள்ளி மாணவிகளை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக செல்போனில் படம் பிடித்துள்ளது தெரியவந்தது. இந்த மாணவன் சக மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பதும், அதை மாணவர்கள் மத்தியில் பரவ விடுவதும் அவனுக்கு ஒரு ஜாலியாம், அது ஒரு ஹாபியாம். மாணவிகளை இப்படி அசிங்க அசிங்கமாக படம் பிடிப்பதுடன், தன் இஷ்டத்துக்கு உடன்படுமாறு அவர்களை மிரட்டுவது வேறு நடந்திருக்கிறது. இது சமாச்சாரம் தலைமை ஆசிரியருக்கும் கொண்டு போகப்பட்டது. ஆனால் அவர் அப்போதைக்கு ஏதோ திட்டி, போய் எல்லாரும் வேலையை பாருங்க என்று விரட்டி விட்டு இருக்கிறார்.
டீச்சரிடம் லவ் டார்ச்சர்
இது எல்லாத்தையும் விட அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த மாணவன் தன் ஆசிரியைக்கு, லவ் டார்ச்சர் கொடுத்திருக்கிறான். “டீச்சர் உங்க செல் நம்பர் தாங்கேளேன், அடிக்கடி பேசலாம்” என்று டீச்சர் பின்னாலேயே தொந்தரவு செய்து அமர்க்களம் செய்துள்ளான். கடைசியில் நம்பரை தெரிந்து கொண்டு, திருமணமாகாத அந்த டீச்சருக்கு ஒரே இரவில் 160 தடவை போன் செய்திருக்கிறான் இந்த மாணவன். அதனால் அந்த டீச்சர் இவன் தொல்லை தாங்காமல் தன் செல்போன் நம்பரையே மாற்றிவிட்டிருக்கிறார். இந்த விஷயங்கள் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த மாணவன் மீது எது போன்ற நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.