உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?

0

ஒருவன் வாழ்வில் முக்கியமான மூன்று செல்வம், வலிமை, அறிவு ஆகும்.

இவற்றை பெற வேண்டுமானால் முப்பெரும் தேவியரின் யோகம் குறித்தவன் ஜாதகத்தில் சிறப்புற்று இருக்க வேண்டும்.

அவ்வாறு, முப்பெரும் தேவியரின் பெயரில் அமைந்துள்ள சிறப்பு யோகங்களான லட்சுமி யோகம், கெளரி யோகம், சரஸ்வதி யோகம் ஆகியவற்றின் சிறப்புகள் சில இங்கு காண்போம்.

லட்சுமி யோகம்
பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் மரணிக்கும் போது கோடீஸ்வரனாக இருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார்.

ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லட்சுமி யோகம் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.

பலன்
நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.

கௌரி யோகம்
ஒரு ஜாதகத்தில் இருக்கவேண்டிய யோகத்தில் சிறப்பானது கௌரி யோகம்.

கௌரி யோகமானது ஒரு ஜாதகத்தில் எப்படி அமையப்பெற்று ஜாதகரை சிறப்படைய செய்கிறது என்பதை பற்றி நம் முன்னோர்களின் கூற்றுப்படி ஆராய்ந்தறியும் போது லக்னத்திற்க்கு பத்துக்குடையவன் நவாம்சத்தில் நின்ற வீட்டதிபதி ஜென்ம லக்னத்திற்க்கு பத்தில் உச்சம் பெற்றிருக்குமேயானால் கௌரி யோகமானது சித்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மனம், எண்ணத்தின் காரகனான சந்திரனின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது. ஒ ருவருக்கு உடல் வலிமையை விட மனோதைரியம் தேவை என்பதை விளக்குவதாக அன்னை சக்தி தேவியின் பெயரில் இந்த யோகம் அமைந்துள்ளது.

பலன்
நல்ல உடல்வாகுடையவர், நற்செயல்களை செய்பவர், நல்எண்ணம் ,மனோதைரியம் உடையவராக இருப்பர்.

சரஸ்வதி யோகம்
சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள்.

ஒருவரின் வாக்குவன்மையை, பேச்சாற்றலை குறிக்கும் 2ம் பாவகத்தை கொண்டும், நற் கோள்களான புதன், குரு, சுக்கிரன் 2ம் பாவகத்தில் மற்றும் கேந்திர, திரிகோணங்களில் வலிமை பெறுவதை கொண்டு கல்வியின் அதிபதி அன்னை சரஸ்வதி தேவியின் பெயரில் இந்த யோகம் விளங்குகிறது.

பலன்
நுண்ணறிவாளர் , எழுத்தாளர், நாடகம், கதை, கவிதை ஆகியவற்றில் ஈடுபாடு அதிகம் ஏற்படும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.

Previous articleமன்னாரில் கிணற்றுக்குள் மறைந்திருந்த அதிர்ச்சி!
Next articleமனைவி இடுப்பில் கண்டல்! கணவன் கழுத்தில் சிராய்ப்பு! மிரளவைத்த சடலங்கள்!