Home Jaffna News வெளியானது புகைப்பட ஆதாரம்! ராஜபக்ஷர்களை ஏமாற்றிய மக்கள்!

வெளியானது புகைப்பட ஆதாரம்! ராஜபக்ஷர்களை ஏமாற்றிய மக்கள்!

0
776

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமகால அரசாங்கத்திற்கு எதிரான நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை விடியும் வரை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டார்.

எனினும் அந்த முயற்சி தோல்வி முடிவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு முன்னர் பிற மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வந்த மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.

லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் இருந்த ஏற்பாட்டளார்கள் மக்களை தடுத்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் அதனை கண்டுகொள்ளாமல் மக்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியின் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சி கொடுக்கப் போவதாக மஹிந்த தரப்பினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமகிந்தவின் பேரணியில் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதி! மதுபோதையில் தள்ளாடிய போராட்டகாரர்கள்!
Next articleகொழும்பில் நடந்த விபரீதம்! மஹிந்தவின் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் ஒருவர் பரிதாபமாக மரணம்.