Home thatstamil one india tamil oneindia tamil அபிராமியின் பகீர் வாக்குமூலம்! குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றேன்! கணவர் தப்பிவிட்டார்!

அபிராமியின் பகீர் வாக்குமூலம்! குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றேன்! கணவர் தப்பிவிட்டார்!

0
503

தமிழகத்தில் குழந்தைகளை கொலை செய்துவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று விசாரணையில் கூறியுள்ளார்.

சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் விஜயன் (30)-அபிராமி (25) தம்பதியினர், இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அபிராமி தன்னுடைய கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, கணவனுக்கும் டீ-யில் விஷத்தை கலந்து வைத்து சென்றிருந்தார்.

ஆனால் அன்றைய நாள் கணவர் வேலை அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு வாராத காரணத்தினால், அவர் உயிர் தப்பினார்.

இதையடுத்து அபிராமி தொடர்பு வைத்திருந்த சுந்தரத்தை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சுந்தரம், அபிராமி இருக்கும் இடம் பற்றி தகவல் தெரிவித்ததால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது விசாரணையின் போது, பாலில் விஷம் கலந்து கொடுத்த பின்னர் குழந்தைகள் உயிர் தப்பிவிடுவார்கள் என நினைத்து அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றேன்.

அதன் பின் கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன். அவர் வராததால், தப்பித்துவிட்டார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் அபிராமியின் இந்த செயலுக்கு காரணம் கணவனின் கண்டிப்பு தான் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கணவனை பழி வாங்க நினைத்துள்ளார்.

கடந்த வாரம் கணவர் வேலைக்கு சென்றதும் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தனது கள்ளக் காதலனின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

ஒரு நாள் முழுவதும் வராததால், இந்த விஷயம் அறிந்த கணவர் கள்ளக் காதலனின் வீட்டிற்கே சென்று மனைவியிடம் கெஞ்சி அழைத்து வந்துள்ளார்.

Previous articleஏமாந்துவிட்டேன் என கலங்கிய சுந்தரத்தின் மனைவி! அவருக்கும், அபிராமிக்கும் இப்படி ஒரு உறவு இருப்பது எனக்கு தெரியாது!
Next articleநடுரோட்டில் வைத்து பிரம்படி கொடுத்த மலேசிய அரசு!ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்!