உங்களுக்கும் இப்படி நடக்கலாம்! யாழில் உறங்கிக்கொண்டிருந்தவருக்கு நள்ளிரவு நடந்த அதிர்ச்சி!

0

யாழில் அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்மீது சாரைப்பாம்பு விழுந்த சம்பவத்தால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அராலிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டு கூரையிலிருந்து அவர் மீது ஏதோவொன்று விழுந்தது.

இதனையடுத்து அவர் என்ன விழுந்ததென்று பார்த்தபோது நன்கு கொளுத்த பாம்பு ஒன்று அவர் உடலில் நெளிந்தவண்ணம் இருந்துள்ளது.

உடனடியாக பதறியடித்து எழுந்தவர் பாம்பை உதறிவிட்டு கூக்குரலிட்டவேறே அறையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஏனையோரும் துடிதுடித்து எழுந்து என்னவென்று பார்ப்பதற்காய் மின்விளக்குகளைப் போட்டுள்ளனர்.

வாயில் எலி ஒன்றை அரைவாசி விழுங்கிய நிலையில் சாரைப் பாம்பு ஒன்று அறையில் அசையமுடியாமல் இருந்துள்ளது.

எவ்வாறாயினும் குறிஒத்த பாம்பை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக குறித்த இளைஞர் கூறினார்.

இதுகுறித்து தெரிவித்த அவர்,

“எமது வீட்டில் நிறைய எலிகள் உள்ளன. இரவில் கூரை வளைகளால் ஓடித்திரியும்போது எரிச்சலாக இருக்கும். அதேபோல வீட்டின் பின்புறமுள்ள மரத்தின் கிளைகள் கூரைமீது முட்டியவண்ணம் உள்ளன. எலியைப் பிடிப்பதற்காக அந்த மரத்தின்வழியாகத்தான் சாரைப்பாம்பு கூரையில் ஏறியிருக்கவேண்டும். எலியை விழுங்கும்போது அசைவதற்கு கஷ்டப்பட்டதால் தவறி விழுந்துவிட்டது” என்றார்.

எவ்வாறாயினும் எலிகள் உள்ள வீட்டில் சாரைப் பாம்புகள் மட்டுமன்றி மரமேறும் தன்மையுள்ள நாகம் உள்ளிட்ட விஷப் பாம்புகள்கூட கூரையில் குடியிருக்கத் தொடங்கிவிடும் எனவும், இதனால் மற்றவர்களும் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் ஊர் பெரியவர் ஒருவர் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றுமுதல் இதன் நிலை? இலங்கை மக்களுக்கு திடீரென வந்த சோகச் செய்தி!
Next articleஎந்தெந்த கிழமைகளில் பிறந்தவர்கள் என்னென்ன குணங்கள் கொண்டிருப்பார்கள் தெரியுமா?