#shraddha #srinath #actress
ஸ்ரத்தா ஸ்ரீநாத்: கன்னட யுடர்ன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது மிலன் டாக்கீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் அளித்த ஒரு பேட்டியில் மற்ற மொழி சினிமாக்களை விடவும் பாலிவுட்டில் ஒழுக்கமாகவும், திறமையானவர்களும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இது தென்னிந்திய சினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய பட உலகில் ஒழுக்கம் இல்லையா? என்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் வைரலாகி உள்ளன.