பசிபிக் பெருங்கடல் பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு அருகில் 8.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் எல்லையில் 560 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டமையினால் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் உறுதி செய்துள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறைவாக இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று ஏற்பட்ட நிலநடுத்தால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.