Home Jaffna News சுவிஸ் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை! தமிழர்கள் மிக அவதானம்!

சுவிஸ் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை! தமிழர்கள் மிக அவதானம்!

0
553

சுவிஸர்லாந்தில் தாழ்வான பிரதேசங்களில் அடுத்த புதன் கிழமை முதல் வெப்பத்துடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம் என சுவிஸ் வாழ் பொதுமக்களுக்கு இன்றைய தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்ரோ சுவிஸ் மற்றும் சமஷ்டி பொது சுகாதார அலுவலகம் என்பன இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளன.

அடுத்த புதன் கிழமை வரை தாழ்நில பகுதிகளில் வெப்பத்தின் அளவு 3 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. valalis, Lake Genrva ஆகிய இடங்களில் வெப்பத்தின் அளவு 3 இல் இருந்து 4 ஆக உயரக்கூடும்.

சுவிஸர்லாந்தின் தென் பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்று கிழமை வரை வெப்பத்தின் அளவு 4 ஆக இருக்கும். அல்ஸ் மலையின் வடக்கு பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களில் தினமும் 32 முதல் 35 டிகிரி வரை வெப்பம் நிலவும். இரவு நேரங்களில் வெப்பத்தின் அளவு 17 முதல் 23 டிகிரியாக இருக்கும். இரவில் ஈரப்பதன் சற்று அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு காரணம்.

அதேவேளை சுவிஸர்லாந்தின் தென் பகுதிகளில் வானம் மேக மூட்டங்களுடன் காணப்படும் என்பது மழைப் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், எதிர்வரும் திங்கட் கிழமை முதல் வெப்பத்தின் தாக்கம் குறையலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்பத்தின் அளவு 3 ஆக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை குடிநீர் பற்றாகுறை ஏற்படலாம் எனவும் இதனால், புல் தரைகள் மற்றும் பூமரங்களுக்கு தண்ணீர் தெளித்தலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் கொள்வளவு கையிருப்பு குறைவாக இருப்பதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என மாநகர சபைகள் இன்று அறிவித்துள்ளன.

அத்துடன் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன தினமும் 4800 கன மீற்றர் தண்ணீரை பயன்படுத்தி வந்ததுடன் தற்போது 3000 கன மீற்றராக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் வெளியில் நெருப்புமூட்டி சமைத்து உண்ணுதல் போன்ற இலகுவில் தீப்பற்றும் விதமான செயற்பாடுகள் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விசேடமாக அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் தமது வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் தீபம் ஏற்றுதல் மற்றும் ஊதுபத்தி ஏற்றிவைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் இந்த காலத்தில் தவிர்த்துக்கொள்வது சால சிறந்தது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Previous articleபாகற்காய்னு சொன்னாலே வாய் கசக்குதா? இதப்படிச்சா இனி அப்படி சொல்லவே மாட்டீங்க!
Next articleவெளியான சிசிடிவி காட்சி! ஆபாச படத்திற்கு அடிமையான இளைஞன் கம்ப்யூட்டர் ஷோ ரூமில் செய்த அதிர்ச்சி செயல்!