இந்து மதத்தை பொருத்த வரை தொய்வங்களின் அருளை பெற நிறைய மந்திரங்களும் பாடல்களும் ஓதப்படுகின்றன. இந்த மந்திரங்களுக்கு தெய்வ அருளை இழுக்கும் சக்தி உள்ளது என்பதால் தொன்று தொட்டு இந்த பழக்கம் இருந்து வருகிறது.
இந்த மந்திரங்களை கொண்டு நல்ல உடல் நலத்தோடு செல்வ செழிப்பையும் நாம் பெறலாம். அப்படிப்பட்ட செல்வ வளங்களை அள்ளித் தருவது தான் இந்த லட்சுமி குபேர மந்திரம்.
லட்சுமி குபேர மந்திரம்
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி ச வித்மஹே
விஷ்ணுபத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்.
பொருள்
ஸ்ரீ விஷ்ணுவின் மனைவியான மா மஹாலட்சுமியை நினைத்து வழிபடுகிறேன். அவரை வாழ்த்துகிறேன். என் ஆசைகள் நிறைவேற எனக்கு அருள்பாவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன்.
குறிப்பு
இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஓதி வந்தால் விரைவிலேயே உங்கள் ஆசைகள் ஈடேறும்





