Home thatstamil one india tamil oneindia tamil கடும் அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீரெட்டி! உணவு கூட வழங்காமல் வெறும் வயிற்றோடு அனுப்பியது யார்?

கடும் அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீரெட்டி! உணவு கூட வழங்காமல் வெறும் வயிற்றோடு அனுப்பியது யார்?

0
684

தன்னை பயன்படுத்திய திரையுலகினர் தன்னை வெறுங்கையோடு அனுப்பினார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சுமத்தியுள்ளார்.

அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.

அந்நிலையில், இயக்குனர் வாராகி என்பவர் சென்னை காவற்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு முறைப்பாடொன்றை தாக்கல் செய்தார்.

அதில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னை திரைத்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக முறையிட்டு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், இவரே சம்மதித்து பலரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ள இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது ஸ்ரீரெட்டிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “நான் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறேன். எனக்கு இது பழக்கப்பட்டதுதான்.

பட விளம்பரத்துக்காக இதை செய்துள்ளீர்கள். ஒரு பெண் தாங்கிக்கொள்ள முடியாத குற்றச்சாட்டை என் மீது சுமத்துகிறீர்கள். நான் ஒருவரிடமிருந்தும் ஒரு பைசா பணம் கூட பெறவில்லை.

உங்களை மறக்க மாட்டேன். நான் யாரையாவது மிரட்டி பணம் பறித்தேன் என்பதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு, என் தலையை வெட்டி விடுங்கள்.

படுக்கையை பகிரும் விபச்சாரிகள் கூட பணத்தை பெறுவார்கள். ஆனால், என்னுடன் உடலுறவு வைத்துவிட்டு உணவு கூட வழங்காமல் என்னை வெறும் வயிற்றோடு அனுப்பினர்.

நான் நடிகர் சங்கத்தினுடனான சந்திப்புக்காக காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஆடி வெள்ளியில் அரிய சந்திர கிரகணம்: நட்சத்திர பலன்கள் கணிப்பு!
Next articleமளிகைக்கடைக்காரர் என்ன செய்திருக்கார்னு நீங்களே பாருங்க! ஏழ்மை நிலையில் இருந்த தன்னை உயர்த்திய மனைவி!