உங்களுக்கு பிடித்த பெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆயிரம் காலத்துப் பயிர் என்று அழைக்கப்படும் திருமண வாழ்வு சிறப்பாக அமைவதற்கு முன்னோர்கள் சில பல வழிமுறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் ஒன்றும் சும்மா சொல்லி வைக்கவில்லை. அவற்றை தெரிந்து கொண்டு நாமும் அவற்றைக் கடைப் பிடிப்போம்.
திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்கள் எத்தனை பொருத்தங்கள் அவசிமாக இருந்த போதும் முதலில் நட்சத்திரப் பொருத்தத்தையே பார்கின்றனர். இங்கு, திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண் மற்றும் பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறதுடன், இவற்றில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் நன்கு பொருந்தியிருந்தால் மட்டுமே அவர்களை திருமண பந்தத்தில் இணைக்கிறார்கள்.
மேலும் பணப்பொருத்தம் பார்ப்பதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட மனப்பொருத்தம், மண் பொருத்தம் மற்றும் மங்கல நாண் சூடுவதற்கான நட்சத்திரப் பொருத்தம் என்பனவற்றைப் பார்த்தல் வேண்டும் என்று தெரிந்துகொண்ட அவர்கள், வாழ்பவனுக்கு நட்சத்திரம் முக்கியம் என்றும் கண்டறிந்துள்ளனர். அதாவது உறுதியான நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் எமக்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுக்க முடியும்.
By: Tamilpiththan