75 வயது கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலை! 28 வயது பெண்ணின் மீது காதல்!

0

பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியரான Paul Davidக்கு 75 வயதில் 28 வயது Jobeth Daguia மீது வந்த காதல், அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் முழுவதையும் இழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

Paul David தனது மனைவியான Sundraவின் மரணத்திற்குப்பின் மிகவும் தனிமையாக உணர்ந்தார்.

அவரது மகளான Audra Wamstekerஇன் குழந்தைகள்தான் அவருக்கு வாழ்க்கையே என்று ஆகிப்போன நிலையில், அவரது பேரக்குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வந்தார் பிலிப்பைன்சைச் சேர்ந்த Jobeth.

தனிமையாகவே வாழ்வை கழித்த Paul Davidக்கு மிகவும் உதவியாக இருந்தார் Jobeth.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் வந்தது, நெருங்கியும் பழக ஆரம்பித்தனர்.

இந்த விடயம் அவரது மகளான Audraவுக்கு தெரிய வர வீட்டில் பூகம்பம் வெடித்தது.

தந்தைக்கும் Jobethக்கும் இடையே உள்ள உறவு தவறானது, அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் Audra.

மகளுக்கு தான் கொடுத்திருந்த குடும்ப நகைகளைக் கேட்டபோது, அவை தனக்கு பரிசாக வழங்கப்பட்டவை என்று கூறி அவைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டார் Audra.

பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு என இருவரும் மல்லுக்கட்டினார்கள்.

இந்நிலையில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு Audraவுக்கே சாதகமாக அமைந்துவிட்டது.

அதாவது சொத்துக்கள் மட்டுமின்றி, குடும்ப நகைகளும் Audraவுக்கே சொந்தம் என நீதிபதி தீர்ப்பு சொல்லிவிட்டார்.

சொத்துக்கள் அனைத்தும் பறிபோன நிலையிலும் தனது வயது வித்தியாசத்தைக் கூட பார்க்காமல் தன்னை மணந்து கொண்ட Jobethஐ மெச்சும் Paul David, அவள் எனது பணத்துக்காக என்னை மணந்து கொள்ளவில்லை என்கிறார்.

தற்போது Jobethஇன் வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுளியலறையில் சடலமாக கிடந்த தாய்: பிரபல நடிகரே கொன்றது அம்பலம்!
Next articleமகிழ்ச்சியில் இளைஞர்கள்! இலங்கையர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த வெளிநாடு ஒன்று!