Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal 70 வயதிலும் அழகு பதுமை: ஆச்சரியத்தில் அதிர்ந்த உலகம்!

70 வயதிலும் அழகு பதுமை: ஆச்சரியத்தில் அதிர்ந்த உலகம்!

0
540

அவுஸ்திரேலியாவில் 70 வயதுள்ள கரோலின் ஹார்ட்ஸ் எனும் பெண் 30 வயது இளமை பெண்ணாக தோற்றமளிப்பது உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும் இந்த பெண் ஒரு தொழிலதிபர். இவர் தனது 70 வயதில் 30 வயது தோற்றமாக காட்சியளிப்பதற்கு, கடந்த 30 ஆண்டுகளாகச் சர்க்கரையைச் சேர்த்துக் கொண்டதில்லை என்று காரணம் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆரோக்கியமான உணவு பழக்கத்தையே பின்பற்றி, தேவையான உடற்பயிற்சியை செய்து வருகின்றேன்.

கடந்த 30 ஆண்டுகளாக சர்க்கரையை எடுத்துக் கொள்ளாத நான், அதற்கு முன்பு வரை இனிப்புச் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்.

கேக்குகளையே எனது உணவாக சாப்பிடுவேன், ஒரு கட்டத்தில் சர்க்கரையை விட்டு விட்டேன், அதன் பின் தான் என் உருவம் இளமையாகவே இருக்கிறது.

எனது உணவில் புரோட்டீன் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன், ஏனெனில் இது என் பசியைக் குறைத்துவிடும்.

பாதாம் பால், தேங்காய்ப் பாலைப் பயன்படுத்தி பிஸ்கெட், ரொட்டிகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவேன்.

தினமும் டார்க் சாக்லெட் சிறிது சேர்த்துக் கொள்வேன். இவை தவிர ஆரோக்கியமான உணவுகளை அளவாக, குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக யோகாவையும் செய்து வருகிறேன். குறைந்தது 8 மணி நேரம் இரவில் தூங்கி விடுவேன். வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்கிறேன்.

மற்ற நேரங்களில் என் கணவருடன் திரைப்படங்கள் பார்ப்பேன், விளையாடுவேன், நண்பர்களைச் சந்திப்பேன், விவசாய சந்தைக்குச் செல்வேன்.

எனக்கு 70 வயது என்பதை யாரும் நம்புவதில்லை. எனது இளமையை பார்த்து பிரேசில், பெல்ஜியம், அயர்லாந்து, கொரியா போன்ற நாடுகளின் தொலைக்காட்சிகளில் பங்கேற்கும்படி நிறைய அழைப்புகள் வந்து கொண்டே உள்ளது.

எனது இளமையின் ரகசியத்தை தக்க வைக்க முதன்மைக் காரணமாக இருப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மகிழ்ச்சியான மனம் மட்டுமே என்று கரோலின் கூறியுள்ளார்.

Previous articleஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதணை!
Next articleவழுக்கை தலை: ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு ரேவதி அம்மாவோட சிறந்த வைத்தியம்! அவசியம் பாருங்க!