தடகளப் போட்டிகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க செய்யும் ஓட்டப் பந்தயங்கள் உடலுக்கும் உற்சாகத்தை தரக் கூடியது.
வேகமாக ஒரு இலக்கை நோக்கி ஓடும்போது நம் மூளையின் செயல் திறனும் அதிகரிக்கும். இதில் உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய மனிதர் என்று பெயர் எடுத்தவர் உசைன் போல்ட். அவரது சாதனை தான் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக அளவில் பெரும் சாதனையாக தற்போது வரை இருந்து வருகிறது.
உசேன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு அதை வெறும் 13.48 நொடியில் ஓடி முடித்தார். இந்த சாதனையை இதுவரை யாரும் முந்தவில்லை. அதை நெருங்கவும் இல்லை. இப்படியான சூழலில் தான் ஒரு 7 வயது சிறுவனின் ஓட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை, அமெரிக்காவின் 7 வயது சிறுவன் பெற்று சாதனை படைத்துள்ளான். புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற சிறுவன், 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்தான்.
இதன்மூலம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளான். மேலும், ஓட்டப்பந்தயத்தில் மற்றவர்கள் பாதி மைதானத்தை தொடுவதற்குள்ளாக, ருடால்ப் குறிப்பிட்ட இலக்கை ஓடி முடித்துவிடுகிறான்.
இந்த சிறுவனின் ஓட்டம் உலகின் வேகமான மனிதன் என்று பெயரெடுத்த உசேன் போல்ட் வேகத்திற்கு இணையானது என்று உடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரக்பி விளையாட்டிலும் ருடால்ப் தன்னிகரற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.