62 ஆண்டுகளின்பின் பதியப்படும் உண்மை!சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி ஏற்றியவரை சுட்டுக்கொன்ற பொலிஸார்!

0

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கையின் தேசியக் கொடி இன்று இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவமானது இலங்கை தமிழர்களின் வரலாறு 62 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்படுகிறது.

சரியாக 62 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் திருகோணமலையில் இலங்கையின் தேசியக் கொடியை இறக்கிவிட்டு கறுப்புக்கொடியை ஏற்றியதற்காக இளைஞர் ஒருவரை சிங்களப் பொலீசார் சுட்டுக்கொன்றனர்.

அதே சம்பவத்தை சரியாக 62 ஆண்டுகள் கழித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செய்துள்ளனர்.

04.02.1957அன்று சிங்ளச்சிறீ சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற 22 வயது நிரம்பிய இளைஞனான திருமலை நடராஜன் கொல்லப்பட்டான் இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற சிங்களக் காடையர்களினால் கோழைத்தனமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக எட்டு ஆண்டுகளால் முதல் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 71,வது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் அன்னாரின் 62,வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.

அதாவது இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் சிங்கள தேசம் 62 வருடங்களுகளை கடந்தும் அதே மனநிலையிலேயே உள்ளது என்பதை இன்று யாழ்ப்பாணப் பல்கழைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய சம்பவம் பதிவுசெய்துள்ளது.

இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரத்தை கடந்த 1948, பெப்ரவரி 4,ம் திகதி பெற்றுக்கொண்டாலும் இந்த சுதந்திரம் வடக்குகிழக்குவாழ் தமிழ்மக்களுக்கு கிடைக்கவில்லை,

அதன் உண்மையை உள்ளார்ந்தமாக உணர்ந்த தந்தை செல்வா (எஷ்.ஜே.வி.செல்வநாயகம்) அவர்கள் 1949,டிசம்பர் 18,ம் நாள் இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வே என்பதை வலியுறுத்தி அதற்காக வேலைத்திட்டங்களை முன்எடுத்தார்.

அகிம்சை ரீதியான பல போராட்டங்கள் இலங்கை சுதந்திரதின நாளை ஏற்றுக்கொள்ளாத நாளாக அறிவிப்பு செய்தல் என்ற எதிர்பு போராட்டங்கள் 1949 தொடக்கம் ஈழத்தமிழ் அரசியல் சாத்வீக போராட்டமாக மாறத்தொடங்கியது.

அந்த காலப்பகுதிகளில் 1956,ம் ஆண்டு எஷ்.டபிலியூ.ஆர.டி.பண்டாரநாயக்கா ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் “தனிச்சிங்களம்” நாட்டில் அமுல் படுத்துவேன் என வாக்குறுதி வழங்கினார்.

அந்த இனவாத கருத்துக்காக சிங்களமக்கள் அமோக வெற்றிபெற்று தனிச்சிங்களச்சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றினார்.

இந்த சட்டம் நாடாளுமன்றில் விவாத்த்திற்கு வரும் வேளை இலங்கை தமிழரசுகட்சி சத்தியாகிரக போராட்டங்களை நடத்தியது வடகிழக்கு தாயகம் எங்கும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் நடந்தன என்பதெல்லாம் வரலாறு.

சிங்களம் மட்டும் சட்டம்!
மூத்த சிங்கள இனவாதியான எஸ்.டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்காவினால் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டும் சட்டம் 08.02.1956 அன்று கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தால் இலங்கைத்தீவில் தமிழ் இரண்டாம் பட்ச மொழியாக்கப்பட்டது.

தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள்!
04.02.1957அன்று சிங்ளச்சிறீ சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ்கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற 22 வயது நிரம்பிய இளைஞனான திருமலை நடராஜன் கொல்லப்பட்டான் இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற சிங்களக் காடையர்களினால் கோழைத்தனமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த 1957ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4,ம் திகதிதான் தமிழீழத் தலைநகர் திருகோணமலை என அழைக்கப்படும் தலைநகரில் இந்த தியாக மரணம் ஏற்பட்டது.

ஆம்..!

1957.02.04 அன்று ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை கரிநாளாக கடைப்பிடிக்குமாறு, தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்த, திருகோணமலை மணிக்கூட்டுகோபுரத்தில் ஏறி கறுப்புகொடி கட்டி, ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தை எதிர்த்த திருமலை நடராஜனை, ஸ்ரீலங்கா காவல்துறை சுட்டுக்கொன்று 62ஆண்டுகள்.

தேசத்திற்காக உயிர்துறந்த தேசப்பற்றாளனை நினைவு கூருவோம்.
1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக எட்டு ஆண்டுகளால் முதல் விடுதலை உணர்வுடன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜன் அவர்களை இன்று 71,வது இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் அன்னாரின் 62,வது ஆண்டு நினைவு நாள் என்பதை ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரும் ஒருகணம் நினைப்போம் அவரின் தியாகத்தை மதிப்போம்.

இன்று 2019,பெப்ரவரி 4,ம் நாள் இலங்கைக்கு 71,வது சுதந்திரம் கிடைத்தாலும் எம்மவர்களுக்கு அந்த சுதந்திரம் எப்போது கிடைக்குமா அதுவே உண்மையான சுந்த்திரநாளாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுவர் பூங்காவில் சில்மிஷ வேலையில் ஈடுபட்ட காதல் ஜோடி! பொலிஸார் செய்த செயல்!
Next articleஉடம்பிலுள்ள முழு இரத்தத்தையும் இயற்கையாக சுத்தம் செய்ய சிறந்த பழம்.