6 இளம் பெண்கள் செய்த மிகவும் மோசமான செயல்! நீதிமன்றம் கொடுத்த எச்சரிக்கை!

0
377

கைத்தொலைபேசியில் ஆபாச படங்கள் மற்றும் கெட்ட வார்த்தைகளை பகிர்ந்து கொண்ட மாணவிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசியில் ஆபாச படங்களை பரிமாறிக் கொண்டதால் மோதிக் கொண்ட மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்தும், பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையிலும் இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த மாணவிகள் குருணாகல் பிரதான நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, ஆபாச படங்களை பரிமாறிக் கொண்ட ஆறு மாணவிகளுக்கும் குருணாகல் நீதிமன்றம் தலா 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதுடன், கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வெஹர மற்றும் கெட்டுவான என்னும் பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 21 வயதான மாணவிகளே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: