55 நாட்களாக விமான நிலையத்தில் வசித்து வந்த ஜெர்மன் பயணி – நாடு திரும்பினார்.

0
159

55 நாட்களாக விமான நிலையத்தில் வசித்து வந்த ஜெர்மன் பயணி – நாடு திரும்பினார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் விமானசேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 18 ம் திகதி முதல் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலேயே ஜெர்மன் பயணி ஒருவர் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் திக‌தி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. இதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த 55 நாட்களாக டெல்லி விமான நிலையத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த எட்கார்ட் ஜீபார்ட் என்பவர் தங்கியிருந்துள்ளார். இவர் இன்று காலைதான் கே.எல்.எம் ஏர்லைன்ஸ் நிவாரண விமானத்தின் மூலம் ஆம்ஸ்ரடாமிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்காகச் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: