5 ம் வகுப்பு மாணவன் தற்கொலை!! கடிதம் கிடைத்ததால் அதிர்ச்சி!

0

5 ம் வகுப்பு மாணவன் தற்கொலை!! கடிதம் கிடைத்ததால் அதிர்ச்சி!

ஆசிரியரின் செயலால் தற்கொலை செய்த 5-ம் வகுப்பு மாணவன்.! கண்டெடுக்கபட்ட உருக்கமான கடிதம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் தனது ஆசிரியை கொடுத்த தண்டனையால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் அந்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நவநீத் என்ற மாணவன் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவன் சரியாக படிக்காததால் வகுப்பு ஆசிரியர் மாணவனுக்கு தண்டனை கொடுத்ததாக கூறப்படுகிறது..

இதனால் மனமுடைந்த அந்த மாணவன் தற்கொலை செய்துள்ளான். இதனையடுத்து மாணவனின் புத்தகபையில் இருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்தார் அவரது தந்தை.

அந்த கடிதத்தில் அப்பா இன்று எனது முதல் தேர்வு,ஆனால் எனது வகுப்பு ஆசிரியர் என்னை தொடர்ந்து மூன்று வகுப்புகளாக நிறக வைத்து தண்டனை அளித்தார்.

இதனால் நான் அழுதுகொண்டே இருந்தேன். ஆனால் நான் அழுதுகொண்டு இருப்பதை ஆசிரியர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாடம் நடத்தினார்.

எனவே நான் எனது வாழ்க்கையை முடித்து கொள்கிறேன். இது போன்ற தண்டனையை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என எனது ஆசிரியரிடம் கேட்டுகொள்கிறேன் என் உருக்கமான கடிதம் எழுதியுள்ளான்.

இந்த கடிதத்தை வைத்து மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் மாணவனின் தற்கொலை குரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇப்படி இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம்! நீங்க எப்படி பாய்ஸ்!இப்படி இருந்தால் மட்டுமே பெண்களை கவர முடியும் ஞாபகம் வச்சுக்கோங்க!
Next articleமடத்தில் சாமியார் ஆடிய ஆட்டம் அம்பலமானது.