கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை சன்னி லியோன் 1200கிகி அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கேரளா மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகள் மற்றும் உடைகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களது பசியை போக்கும் விதமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளாமானோர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் தன்னுடைய கணவர் டேனியல் வெப்பருடன் சேர்ந்து, 1200கிகி எடையுள்ள அரிசி மற்றும் பருப்பு பொருட்களை கேரளாவிற்கு லாரியில் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘நான் அனுப்பிய உதவிகள் மிகவும் குறைவானது என்று எனக்கு தெரியும். அதிகம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகை சன்னிலியோன் கேரள மக்களுக்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தற்போது பொய்யான தகவல் என்பது தெரியவந்துள்ளது.