5 வருடங்களாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! மனைவி செய்த கொடூர செயல்!

0
304

மதுரையில், பைனான்சியர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், தாயும் மகளும் சேர்ந்து கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (55). பைனான்சியரான இவரை கடந்த 1ம் தேதி இளங்கோவனை இரு டூவீலர்களில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த இளங்கோவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் தனிப்படை போலீசார், 3 பிரிவுகளாக குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொலையான இளங்கோவனுடன் வசித்து வந்த அவரது இரண்டாவது மனைவி அபிராமி (38), அவரது மகள் அனுசுயா (21) ஆகியோர் கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொலை செய்ததாக, ஊர்சேரி கிராம நிர்வாக அலுவலர் காளிராஜூக்கு புகார் வந்தது.

இதையடுத்து அவர் அலங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து தாய், மகள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனுசுயாவின் உறவினரான புதூர் பாலமுருகன் உள்ளிட்ட கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட இளங்கோவனின் இரண்டாவது மனைவி அபிராமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்துகள் வாங்கியதில் அபிராமி, அனுசுயாவிற்கு இளங்கோவன் எதுவும் கொடுத்து உதவவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த 5 ஆண்டுகளாக அனுசுயாவிற்கு இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ள

மகள் முறை உறவுள்ள பெண்ணிடம் அப்படி நடந்துகொள்ளலாமா என்று அபிராமி பலமுறை இதுகுறித்து எச்சரித்தும் இளங்கோவன் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அத்துடன் அனுசுயாவின் திருமண செலவிற்கும் இளங்கோவன் உதவவில்லை. இதனால் 6 மாதத்திற்கு முன்பு அவரை கொலை செய்ய அபிராமி, அனுசுயா முயற்சி செய்துள்ளனர். அதில் தப்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி அவர் வீட்டிலிருக்கும் தகவலை கூலிபபடையினருக்கு தெரிவித்து திட்டமிட்டபடி கொலை செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

இளங்கோவனை கூலிப்படையினர் வெட்டிச்சாய்க்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளம் யுவதியை புரட்டி எடுத்த சுண்டெலி! பாடாய் படும் அதிர்ச்சி காட்சி! யாரும் சிக்கிடாதீங்க பிளீஸ்!
Next articleஜனாதிபதிக்கு 24 மணிநேர காலக்கெடு விதித்த ஹிஸ்புல்லாஹ்!