5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்! ஏன்னு கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

0
443

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு மாலி. இவர் படாஸ் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளது.

பாபுவின் ஐந்து மாத குழந்தை, எப்போதும் வாயில் ஜொல்லு வடித்துக் கொண்டே இருந்தது. இதனை நிறுத்துவதற்காக, பாபுவின் மனைவி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது சிலர், உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் வைத்தால் ஜொல்லு விடுவதை நிறுத்திவிடும் என ஆலோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஒரு உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் பாபுவின் மனைவி வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மீன் குழுந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியது.

இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு பின்னர், குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீன் வெளியே எடுக்கப்பட்டது.

அக்கம்பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வகையில் தாய் செயல்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிறைப்பு தன்மை அதிகரிக்க தினமும் அஞ்சு ரூபாய் செலவு செய்தால் போதும்!
Next articleஉதவிசெய்வது இவ்வளவு பெரிய தவறா! வெளிநாடு செல்லும் நபர்களே இதோ அதிர்ச்சி சம்பவம்!