மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய தம்பதியினர் 4 மாதக் குழந்தையை அபாயகரமான முறையில் வைத்து விளையாட்டுக் காட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த 28 வயதாக தம்பதியினர் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வந்திருந்தனர். அங்கு அவர்கள் தங்களின் 4 மாதக் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோலாலம்பூர் பொலிசார் அந்தத் தம்பதியைக் கைது செய்தனர். உலகம் சுற்றும் தங்களுக்கு பணத் தேவைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்ய தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.