30 நாட்களுக்கு அதிஷ்ட மழை இந்த ஒரே ஒரு ராசிக்கே!

0

ஆகஸ்ட் மாதம் சூரியன் கடக ராசியில் பாதி நாட்களும், சிம்ம ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார்.

இந்த சூரியனுடன் கூடவே புதன் பயணக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் பலருக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.

30 நாட்களுக்கு இந்த ஒரே ஒரு ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும்! அனுபவிக்கத் தயாராகுங்கள்.

மேஷம்
மன நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதம் ஆகஸ்ட் மாதம்.

செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். புத்தியும் தெளிவடையும். சூழ்நிலையும் சாதகமாக இருக்கும். சனி, குரு வக்ரமடைந்து சஞ்சரிக்கின்றனர். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

புதிய வேலை அதிக சம்பளத்தில் கிடைக்கும். செவ்வாய் பகவானின் பயணம் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை.

கணவன் மனைவி உறவில் சில உரசல்கள் வந்து செல்லும். பேச்சைக்குறைத்து செயலில் கவனம் செலுத்துங்கள்.

நினைத்தது நிறைவேறும்
சுக்கிரன் பயணம் சாதகமாக உள்ளது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. திருமண சுப காரியங்களில் சில தடைகள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக உள்ளது. புதனின் பயணம் சாதகமாக உள்ளது. உயர்கல்விக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், உடல் ஆரோக்கியம் அற்புதமாக உள்ளது. உணவில் காரத்தை குறைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் பலகார உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். வீடு, வாகனங்கள் வாங்குவதற்கு இது சாதகமான மாதம்.

சனிபகவான் வக்ரமடைந்து பயணம் செய்வது வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

வக்ரமடைந்த சனி
சனி வக்ரமடைந்திருப்பதால் தொழில் ரீதியாக சில நன்மைகள் நடைபெறும். இதுநாள் வரை இழுபறியாக தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடி வரும். தடைகளை தாண்டி முன்னேற்றம் வரும்.

10 ஆம் தேதிக்கு மேல் ராசிநாதன் இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். சூரியன், குரு, சனி ஆகிய கிரகங்கள் ஆட்சி பெற்றுள்ளன.

வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.

சுப காரியங்கள்

நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உங்கள் தொழில் காரகன் சனி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார்.

உங்களுடைய புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் முதலீடுகளை தைரியமாக செய்யலாம். குடும்பத்தில் உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடைபெறும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் மேஷம் ராசிக்கு சாதகங்கள் அதிகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

30 நாட்களுக்கு அதிஷ்ட மழை இந்த ஒரே ஒரு ராசிக்கே!

Previous articleஎதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கின்றதா மக்களின் போராட்டம்!
Next articleஉங்க பிறந்த திகதிக்கு நீங்க போன ஜென்மத்துல இப்படித்தான் இருந்திருப்பீர்கள்!