3 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! பின்பு என்ன ஆனார் தெரியுமா?

0
706

தமிழ்நாட்டில் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு ஆசிரியரை உறவினர்கள் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் இன்று பள்ளி செல்ல மறுத்துள்ளார். என்னவென்று பெற்றோர் விசாரிக்கையில், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த கணக்கு ஆசிரியர் சதீஷ் பாலியல் தொல்லை கொடுப்பதாக சிறுமி கூறவே, இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்து போயினர்.

இதை அடுத்து சிறுமியை வழக்கம் போல் பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர், உறவினர்களுடன் பிற்பகலில் அங்கு சென்றனர். கணக்கு ஆசிரியர் சதீஷை பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் இழுத்து வந்த அவர்கள், கைகளாலும், செருப்பாலும் சரமாரியாக அடித்தனர்.

தாக்குதலில் சதீசுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உருக்குலைந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பள்ளப்பட்டி போலீசார் சதீஷை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous articleஅரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! நிதியமைச்சின் அதிரடி அறிவிப்பு!
Next articleகுழந்தைகளை கொலை செய்த மனைவி! கணவன் தப்பித்தது எப்படி? காதலனின் பகீர் வாக்குமூலம்!