தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்ப சோக கதையை பகிர்ந்துள்ளனர்.
அதில் ஷெரினும் தனது கதையை கூறியிருந்தார், அதில் தன்னுடைய அப்பா 3 வயதிலேயே தன்னை விட்டுச் சென்றதாக கூறியிருந்தார். அவர் விட்டுச் சென்றதற்கு காரணம் ஷெரின் பெண் குழந்தையாக பிறந்தது ஒன்றே தானாம்.
கணவரை பிரிந்த பின் அவரது அம்மா தான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து வளர்த்துள்ளார். தற்போது ஷெரின் அப்பாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ ஷெரின் குழந்தையில் அம்மா-அப்பாவுடன் இருக்கும் புகைப்படம்.