3 நாட்கள் ஆறு கிரகங்கள் கூட்டணி தனுசு ராசியில்! எச்சரிக்கை திடீர் விபரீதம் நடக்கும்? யாருக்கு என்ன பரிகாரம்!

0

3 நாட்கள் ஆறு கிரகங்கள் கூட்டணி தனுசு ராசியில்! எச்சரிக்கை திடீர் விபரீதம் நடக்கும்? யாருக்கு என்ன பரிகாரம்!

டிசம்பர் மாதம் வந்தாலே பயம்தான், காரணம் டிசம்பரில்தான் மிகப்பெரிய புயல் மழை எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

1964ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய புயல் வீசியதில் தனுஷ்கோடி முற்றிலும் சிதைந்து சின்னாபின்னமானது.

இந்த புயல் தாக்கியது டிசம்பர் 22 முதல் 25 முதல் புயல் கோர தாண்டவமாடியது. அதே போல 2004 ஆண்டு டிசம்பர் 26 அதிகாலையில் இந்தோனேசியால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் இந்தியாவிலும் இலங்கையிலும் வங்கக்கடலோரத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்து போயினர்.

அதுபோல ஒரு பேரழிவு எதுவும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் தனுசு ராசியில் சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைந்துள்ளதே இதற்குக் காரணம் கூடவே சூரிய கிரகணமும் இந்த நாளில் வருகிறது. பொதுமக்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாகவே நவ கிரகங்களும் 12 ராசிகளில் சஞ்சரிக்கின்றன. இதில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு கேது போன்றவைகளின் நகர்வு மெதுவாகவே இருக்கும்.

சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார். இப்போது தனுசு ராசியில் இருக்கிறார் சனி. ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி நிகழும்.

ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியில் சனியோடும் இணைந்திருக்கிறார். குரு பகவான் ஓராண்டுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைவார்.

குருவின் சஞ்சாரமும் தற்போது சனி, கேது உடன் இணைந்துள்ளது. மாத கோள்களான புதன், சூரியன் தற்போது தனுசு ராசியில் உள்ளன. சந்திரன் இன்று மாலை முதல் தனுசுவில் ஐந்து கிரகங்களுடன் இணைகிறார்.

மொத்தத்தில் ஆறு கிரகங்கள் தனுசுவில் இணைந்திருக்கும் அதே நேரத்தில் மூலம் நட்சத்திரத்தில் கேது கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஆறு கிரகங்களின் சேர்க்கை தனுசு ராசியில் 3 நாட்கள் இருக்கிறது.

சந்திரன் 27ஆம் தேதி மகரம் ராசியில் நகர்ந்தாலும் அதன் பின்னர் ஐந்து கிரகங்கள் தனுசுவில் ஜனவரி 13ஆம் தேதிவரை இணைந்திருக்கின்றன. இந்த கிரக சேர்க்கையால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் பாதகங்கள் ஏற்படுமா? பரிகாரம் எதுவும் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

பாக்ய ஸ்தானம்

கால புருஷ தத்துவப்படி தனுசு ராசி ஒன்பதாம் இடம். பாக்ய ஸ்தானம். இந்த இடத்தில் கிரகங்கள் இணைந்திருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தனுசு ராசி குருவின் வீடு, இந்த வீட்டில் குரு இருப்பதால் குருவிற்குத்தான் பலம் அதிகம் எனவே ஆறு கிரகம் சேர்வதால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. தனுசு ராசி நெருப்பு ராசி, இந்த ராசியில் கிரகங்கள் இணைவதால் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதே ஜோதிடர்களின் கருத்து.

அனுமன் ஜெயந்தி

டிசம்பர் 26ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி வருகிறது. இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடுவதோடு வெற்றிலை மாலை சாற்றி வணங்கலாம். சூரிய கிரகணமும் அன்றைய தினம் வருகிறது. இந்த நாளில் அனைத்து ராசிக்காரர்களும் நிதானமாக இருப்பது நல்லது. அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்களும், கேட்டை, பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கும் தோஷம் இருப்பதால் பரிகாரம் செய்ய வேண்டும்.

மேஷம்

திடீர் வருமானத்தை கொடுக்கும், அதிர்ஷ்டங்கள் தேடி வரும். 27ஆம் தேதி வரை கிரகங்கள் இணைந்துள்ளதால் நிதானத்தை கடைபிடிங்க வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. குடும்பத்தில் அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். சுக்கிரன் தவிர பிற கிரகங்கள் ராகு மற்றும் கேதுவின் பிடியில் சிக்கியுள்ளன. அகல் விளக்கு வாங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். 27ஆம் தேதி வரை இந்த தீபம் எரிய வேண்டும். தனுசுவில் இருந்து சந்திரன் விலகிய பின்னர் இந்த தீபத்தை நீர் நிலைகளில் போட்டு விட்டு குளித்து விட்டு சாமி தரிசனம் செய்வது நல்லது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த 3 நாட்களும் அப்பாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். உங்க ஆரோக்கியத்தையும் கவனிங்க. இளைய சகோதரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். முக்கிய வாக்குறுதிகளை தவிர்த்து விடுங்கள். இந்த நாளில் தினசரியும் உங்க மொபைல் போனில் தங்கத்தேர் வீடியோவை பாருங்கள். புதிய முயற்சிகளை தொடங்க வேண்டாம். அம்பாளை நினைத்து வணங்குங்கள். பாதிப்புகள் நீங்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிதானம் தேவை. உணவுக்கட்டுப்பாடு அவசியம், தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம். கண்டச்சனி காலம் என்பதால இரவு நேரங்களில் வீண் பயணங்களை தவிர்த்து விடுங்கள். குளிக்கும் போது கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குளிங்க. விளக்கேற்றி மகாலட்சுமியை வணங்குங்கள் பாதிப்புகள் குறையும்.

கடகம்

ஆறாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. கணவன் மனைவி பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க தொழில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானமாக இருங்க. மூத்த சகோதரரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கிரகண நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுங்கள். துர்க்கையம்மனை மனதார வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கும். துர்க்கா ஸ்தோத்திரங்களை சொல்லுங்க.

சிம்மம்

ஐந்தாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. குடும்பம், வேலையில் முக்கிய முடிவுகளை தவிர்த்து விடுங்கள், வேலை மாற்றம் பற்றி எந்த முடிவும் எடுக்காதீங்க. குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. இரவு நேரத்தில் வெளியே வண்டி வாகனங்களில் வெளியே சுற்ற வேண்டாம். பாதிப்பு குறைய அம்மன் கோவிலுக்கு போய் விளக்கு போட்டு வழிபடுங்கள். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். உங்க வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

கன்னி

நான்காம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண முதலீடுகளில் முக்கிய கவனம் தேவை. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான பேச்சுக்களில் அக்கறை காட்டுங்கள். முருகப்பெருமானை வணங்குங்கள் நல்லதே நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்

மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் இணைந்துள்ளன. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் நடத்துபவர்கள் முக்கிய முதலீடுகள் வேண்டாம். இந்த 3 நாட்கள் நீங்க தகவல் தொடர்புல கவனமாக இருங்க. பயணங்களில் நிதானம் தேவை. 3 நாட்கள் உங்க செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுவது நல்லது. மகாவிஷ்ணுவை மனதார நினையுங்கள். சயனகோல பெருமாளை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 2ஆம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளதால் மறைமுக எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று நாட்கள் குடும்பதோட நீங்க வெளியே போகாதீங்க. புதிய முயற்சிகள் எடுக்காதீங்க. வாக்கில் நிதானம் தேவை. பயப்பட வேண்டாம் கடவுள் அருள் கண்டிப்பாக உண்டு.

தனுசு

இந்த ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையாக இருங்க. வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகாதீங்க. ஆறு கிரகங்கள் உங்க ராசியில்தான் இருக்காங்க. தந்தை காரகன் சூரியன், தாய் காரகன் சந்திரன் இணைவு மன அமைதியை பாதிக்கலாம். எந்த முக்கிய முடிவும் எடுக்காதீங்க. வீட்டில் அமைதியாக தியானம் பண்ணுங்க நல்லதே நடக்கும் பயப்பட வேண்டாம்.

மகரம்

விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. வெளிநாடு பயணம், வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுங்கள். வேகம் வேண்டாம் நிதானமாக இருங்க. கர்ப்பிணிகள் எச்சரிக்கையா இருங்க. உங்க குடும்பத்தினரோடு சண்டை சச்சரவுகள் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க. குழந்தைகள் மீது அக்கறை காட்டுங்க. நீங்க நீண்ட நாட்களாக விருப்படும் விசயங்களை மனதார வேண்டிக்கொள்ளுங்கள் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும்.

கும்பம்

லாப ஸ்தானத்தில் ஆறு கிரங்கள் இணைந்துள்ளன. அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சொத்துக்கள் எதையும் வாங்கவோ, விற்கவோ வேண்டாம். தாய்மாமனுடன் எந்த கொடுக்கல் வாங்கல் வேண்டாம். கிரகங்கள் லாப ஸ்தானத்தில் நின்று ஐந்தாம் வீட்டினை பார்ப்பதால் பூர்வ புண்ணிய சொத்துக்கள் சேரும். அன்னை காளிகாம்பாளை வணங்குங்கள்- 3 நாட்கள் பூஜை அறையில் அணையாத தீபம் ஏற்றி வழிபடுங்கள். 27ஆம் தேதி ஆலய தரிசனம் அவசியம் பண்ணுங்க.

மீனம்

மீனம் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் இணைகின்றன. உங்க தொழிலில் முதலீடு செய்வது பற்றி 3 நாள் யோசிக்காதீங்க. கடன் வாங்கவே வாங்காதீங்க. கிரகங்கள் கேதுவின் சாரத்தில் இணைந்திருக்கின்றன. இதனால் ஏற்பட பாதிப்புகள் நீங்கவே ஆலய தரிசனம் செய்ய சொல்கிறோம். உங்களுக்கு கர்ம ஸ்தானத்தில் கிரகங்கள் இணைந்துள்ளதால் வேலை தொழில் பற்றிய முக்கிய முடிவுகளை இந்த 3 நாட்கள் நீங்க எடுக்காதீங்க.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று நிகழ்ந்த அரிய சூரிய கிரணம்!
Next articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 27.12.2019 !