3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை விவகாரம்: பல நடிகைகள் சிக்கியது அம்பலம்!

0
525

வாட்ஸ் அப் மூலம் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் வலை வீசப்பட்ட நிலையில் மேலும் பல நடிகைகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை வீசுவதாக நடிகை ஜெயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஜெயலட்சுமிக்கு வலை வீசிய பொலிசார் இதில் தொடர்புடைய கவியரசன், முருகபெருமாள் ஆகிய இருவரை அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு நைசாக வரவழைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரிலேசன்ஷிப் சர்வீஸ் என்ற பெயரில் குழு அமைத்து, நடிகைகளுக்கு பாலியல் வலை வீசி முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கும்பல் விருந்து படைத்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசியல் பிரமுகர்கள், விஐபி-க்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

6 மணி நேரம், 12 மணி நேரம், வெளிமாநிலங்களுக்கு சென்றால் ஒரு தொகை என லட்சக்கணக்கில் பேரம் பேசி நடிகைகளை தங்களது வலைக்குள் சிக்க வைக்கிறது இந்த கும்பல்.

இப்படி பல நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட இருவரிடமும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: