3 மில்லியன் பாம்புகளுடன் மக்கள் வாழும் வினோத கிராமம்!

0
623

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 3 மில்லியன் பாம்புகளுக்கு மத்தியில், 600 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைசியில் அமைந்துள்ள சிறிய கிராமம் சிசிகியாவ். இங்கு சுமார் 600 மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால், இவர்களுடன் 3 மில்லியன் அளவுக்கு பாம்புகளும் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இங்குள்ள நிலப்பரப்பு, நீர்நிலைகள் அனைத்திலும் பாம்புகளின் எண்ணிக்கையே அதிகம்.

ஆரம்பத்தில் இந்த பாம்புகளை பார்த்து பயந்த மக்கள், பின்னர் பசிக்கு உணவாக அவற்றை பயன்படுத்த தொடங்கினர். அது மட்டுமன்றி கொடிய நோய்களை தீர்க்கும் மருந்துகளையும் இந்த பாம்புகளின் வாயிலாக இக்கிராம மக்கள் எடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, இங்கு பாம்பு பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் நாளடைவில் பல்கி பெருகி வருகிறது. குறிப்பாக இந்த பாம்புகளின் விஷம் அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், பாம்பு வளர்ப்பு இங்கு குடிசைத்தொழிலாகவே மாறியதால் இக்கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே பிற கிராம மக்கள் அழைக்கின்றனர். மருந்துவ தேவைகள் பெருகியுள்ளதால் சிவப்பு கட்டுவிரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக்கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின.

அதனால், ஒரு கிராம் பாம்பு விஷம் சுமார் 5 ஆயிரம் யுவான்கள் வரை விலை போகிறது. தற்போது இந்த கிராம மக்கள் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள ஆண், பெண் என பலரும் பாம்பு கடிபட்ட அடையாளங்களை கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால், 4 லட்சம் யுவான்கள் வரை பணம் கிடைக்கும் என்பதால் இங்குள்ள மக்கள், சுமார் 3 மில்லியன் பாம்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த பாம்பு தொழில் தங்களை ஒரு போதும் கைவிடப்போவதில்லை என இந்த கிராமத்து மக்கள் உறுதியுடன் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: