இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றையதினம் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தின் பல இடங்களில் 100 – 150 கிலோ மீற்றருக்கும் இடையிலான அடைமழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியா, மாத்தளை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.