மாற்றப்பட்ட புதிய இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், சாலையில் கிடந்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்ற சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த யாசின் என்ற சிறுவன், சாலையில் இருந்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.
இதனையடுத்து அந்த சிறுவனை அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், அந்த சிறுவனின் கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு ஒன்று, இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மாணவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், ஆத்திசூடி – நேர்பட ஒழுகு என்ற தலைப்பின் கீழ் சிறுவன் யாசினின் புகைப்படத்துடன், அவரின் செயல் விளக்கப்பட்டு உள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: