29 ஆம் தேதி கும்ப ராசியில் நுழையவுள்ள‌ சனி பகவானால் கோடி அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!

0

29 ஆம் தேதி கும்ப ராசியில் நுழையவுள்ள‌ சனி பகவானால் கோடி அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி பகவான் பல நன்மைகளை செய்யப்போகிறார். 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியில் நுழையவுள்ளார்.

சனி தற்போது மகர ராசியில் இருக்கிறார். சனி தனது ராசியை மாற்றும் போது, ​​அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகும்.

யாருடைய ஜாதகத்தில் சனி அசுப பலன்களை அளிக்கிறாரோ, அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 29-ம் தேதி சனி பகவான் ராசி மாறிய பிறகு மூன்று ராசிக்காரர்களுக்கும் சனிபகவானின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்கு, சனி பகவானின் சஞ்சாரம் நன்மை தரும் ஸ்தானத்தில் அதாவது 11ம் வீட்டில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சனிபகவான் லாபம் தருவார்.

அதே சமயம் புதிதாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு சனியின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். நீங்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த புதிய வேலைக்கான உங்கள் தேடல் முடிவடையும்.

பணம் சம்பாரிக்க வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சியாகவு செழிமையாகவும் இருக்க சிறப்பான வாழ்க்கையை எதிர்ப்பார்க்கலாம்.

வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. சுக்கிரன் கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனியின் சஞ்சாரம் இந்த ராசிக்கு சுப பலன்களை தரும்.

மகரம்
மகர ராசிக்கு சனிபகவான் கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார். உங்கள் ராசியின்படி இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் பணம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

சனியின் இந்த மாற்றம் மிகவும் நல்லதாக இருக்கும். அரசியல் துறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

மகரம் என்பது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஆகையால், சனியின் பெயர்ச்சி இந்த ராசிக்கு மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் வகையிலும் இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 17.03.2022 Today Rasi Palan 17-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleமார்ச் 31 ஆம் தேதி கும்ப ராசியில் சஞ்சாரிக்கும் சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது! சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்!