பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென் தமிழ், இந்தி உட்பல பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
43 வயதான இவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. Neelam Sen மற்றும் Rajeev Sen ஆகிய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், சுஷ்மிதா சென் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரோமன் ஷால் என்ற 27 வயது மாடலை காதலித்து வருகிறார்.
முதலில் கிசு கிசுவாக பரவிய இந்த தகவலை பின்னர் சுஷ்மிதாவே உறுதிப்படுத்தினார். இருவரும் தாஜ்மஹாலுக்கு ஜோடியாக சென்று எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி இருந்தார்.
படத்தின் கீழே, எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவருக்கும் ரோமனுக்கும் 16 வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்கள், இப்போது திருமணத்துக்கு தயாராகி விட்டனர். இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சுஷ்மிதாவிடன் கேட்டுள்ளார் ரோமன். சுஷ்மிதாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.