27ம் திகதி நிகழப்போகும் சுக்கிர பகவானின் இடமாற்றத்தால் ராஜயோகத்தை அள்ளிச்செல்லும் 4 ராசிகள் இவர்கள் தான்!
பிப்ரவரி 27 முதல் சுக்கிரன் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், யோகம் பண ஆதாயத்திற்கு காரணமாகிறார், அதுமட்டுமின்றி, சுக்கிரனின் தாக்கத்தால், அன்னை லட்சுமியின் சிறப்பு அருளும் கிடைக்கிறது.
பிப்ரவரி 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். சுக்கிரனின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப்போகிறது. மகிழ்ச்சியில் மூழ்கவிருக்கும் ராசிகளில் உங்கள் ராசியும் உள்ளதா?
மேஷம்
சுக்கிரனின் ராசி மாற்றம் மேஷ ராசியினருக்கு சாதகமாக அமையும். இந்த சமயத்தில் சிறப்பான பண ஆதாயம் கிடைக்கும்.
தொழில், வியாபாரம், வேலை மற்றும் பொருளாதாரம் வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி பரிவர்த்தனை மாற்றம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் செய்யும் எந்த ஒரு வேலையும் நல்ல பலனைத் தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். தினசரி வருமானம் அதிகரிக்கும்.
கடகம்
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் வியாபாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான லாபம் உண்டாகும். வியாபாரத்தில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நிலுவையில் இருக்குக்ம் பணம் கிடைக்கும். வீடு, வாகன ஆசை நிறைவேறும். கூட்டுத் தொழிலில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
கன்னி
சுக்கிரனின் ராசி மாற்றம் கன்னி ராசியினருக்கு சாதகமாக அமையும். திருமணமாகாதவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத்துணையின்முழு ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வருமானம் கூடும். வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.