2023 பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன? பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை!

0
175

2023 பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன? பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை!

2023 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

அந்தவகையில் இந்தவருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் ஜனவரி 15
நல்ல நேரம் – காலை 07.30 மணி முதல் 08.30 வரை
மாலை 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11.30 வரை
எமகண்டம் – பகல் 12 முதல் 01.30 வரை
ராகு காலம் – மாலை 04.30 முதல் 6 வரை
பொங்கல் வைக்க சரியான நேரம் – காலை 07.45 முதல் 08.45 வரை

வெளிநாடுகளில் இருப்பவர்கள்
காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் ஜனவரி 16
காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை

Previous articleதுலம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!
Next articleதினமும் காலையில் தேன் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்