2023 சனி பெயர்ச்சி ஜென்ம சனி என்றாலும் தடைகளை தாண்டி ஜெயிக்கப்போகும் ராசி நீங்கதான்!

0

2023 சனி பெயர்ச்சி ஜென்ம சனி என்றாலும் தடைகளை தாண்டி ஜெயிக்கப்போகும் ராசி நீங்கதான்!

சனிபகவான் கும்ப ராசிக்கு அதிபதி. உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தான அதிபதியும் அவரே. சனிபகவான் ஜென்ம ராசியில் அமரப்போகிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியாக பயணம் செய்யப்போவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

2023 சனி பெயர்ச்சி

சனிபகவான் உங்க ராசியில் அமர்ந்து உங்க லக்னத்திற்கு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு, லாப ஸ்தானமான 10ஆம் வீட்டினை பார்க்கிறார். சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் கும்ப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார் ராசி அதிபதி சனிபகவான். கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். 30 வயதை கடந்த வர்களுக்கு முன்னேற்றகரமான காலம் காரணம் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான்.

தொழில் தொடங்குவீர்கள். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். வெளிநாடு யோகமும் கைகூடி வரும். அதிர்ஷ்டம் மூலம் பணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும். சனிபகவனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புரமோசன் கிடைக்கும். இதுநாள் வரை வராமல் இருந்த பணம் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கூட்டுத்தொழில் நன்றாக நடைபெறும் சுப செலவுகளும் வரும். திருமணம் தடைகளுக்குப் பிறகு நடைபெறும். தைரியமும் தன்னம்பிக்கையும் கைகூடி வரும் சகோதர சகோதரிகளுக்கு சுப செலவுகள் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான யோகம் வந்து விட்டது. அதிகமாக கடன் வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2023 சனி பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால் யோகமா? சோகமா?
Next article2023 சனிப்பெயர்ச்சியில் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள்!