2022 பிப்ரவரி 19 ஆம் தேதி தொடக்கம் 2022 மார்ச் 20 ஆம் தேதி வரை குரு அஸ்தமனமாவதால் ஒரு மாத காலம் குரு பகவான் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறார்!
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு மாற்றவுள்ளார்.
இப்படி ராசியை மாற்றுவதற்கு முன், குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 மார்ச் 20 ஆம் தேதி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.
இப்படி குரு அஸ்தமனமாவதால் ஒரு மாத காலம் ஒருசில ராசிக்காரர்களுக்கு மிகவும் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு அஸ்தமன காலம் மிகவும் நல்ல காலமாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். செல்வத்தை அள்ளி அனுபவிக்க போகின்றீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். எனவே தனுசு ராசிக்காரர்கள் இந்த குரு அஸ்தமன காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இதுவரை நிலுவையில் உள்ள உங்களின் வேலைகள் இக்காலத்தில் முழுமையாக முடிக்கப்படும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணம் இனிமையாக இருக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசியின் அதிபதியும் குரு பகவான் என்பதால், இந்த குரு அஸ்தன காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். பயணங்கள் இனிமையாக இருக்கும். நண்பர்களின் உதவியுடன் புதிய வேலையை தொடங்கத் திட்டமிடுவீர்கள்.