2022 தொடக்கம் 2027 வரையான 5 வருட காலம் ஆட்டிப்படைக்கப் போகும் ஏழரை சனி! தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளின் பலன்கள் எப்படி இருக்கும்!
சனிபகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைகிறார்.
ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணிப்பார்.
பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி செல்லும் சனிபகவான் மகர ராசியில் ஆறு மாத காலம் பயணிக்கிறார்.
பின்னர் நேர் கதியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு மீண்டும் இடப்பெயர்ச்சியாகிறார்.
2025ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில்தான் பயணம் செய்வார்.
தனுசு ராசிக்காரர்களே:
ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவிக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வருடம் சூப்பரான ஆண்டாக அமையப்போகிறது. திடீர் யோகங்கள் தேடி வரும். குருபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளதால் புதிய வேலை கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் புரமோசன் கிடைக்கும். மொத்தத்தில் 2022ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாக அமையவுள்ளது.
மகரம் ராசிக்காரர்களே:
திடீர் அதிர்ஷ்டத்தினால் பண வரும் நிதி நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். சனி பகவான் ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை . தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
நெருக்கடிகள் முடிவுக்கு வரும். 2022ஆம் ஆண்டு நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமையவுள்ளது.
கும்பம் ராசிக்காரர்களே:
சனிபகவான் உங்கள் ராசியில் வந்து ஜென்ம சனியாக அமரப்போகிறார். 2022 – 2027 வரை இன்னும் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஏழரை சனியின் பிடியில்தான் இருக்க வேண்டும் என்பதால் வேலை தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. சொத்து சேர்க்கையும் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.
மீனம் ராசிக்காரர்களே:
திடீர் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். குருவின் பார்வையால் திருமண சுப காரியங்கள் கைகூடி வரும். குரு கூடவே இருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்றாலும் ஆணவமும், தலைக்கனமும் இருந்தால் சனிபகவான் தட்டித்தான் வைப்பார் கவனம் தேவை.