2022 சித்திரை சுபகிருது தமிழ் புதுவருட பலன்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படியாக அமைய இருக்கிறது!
தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும்.
ஏப்ரல் 14 ஆம் திகதி தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.
கிரகப்பெயர்ச்சி
சுபகிருது தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களின்ல சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்வார். சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்கிறார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்.
சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் திகதி ஏப்ரல் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார்.
ஆனி 28ஆம் திகதி ஜூலை 27ஆம் திகதியன்று செவ்வாய்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு செல்கிறார்.
மேஷம்
சுப கிருது புத்தாண்டில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் பயணம் செய்கிறார்.
சனிபகவான் தொழில் ஸ்தானமான 10ஆவது வீட்டிலும் 11வது வீடான லாப ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். ஜென்ம ராசியில் ராகு, களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
சூரியனின் பயணம் ராசியில் உள்ளது. புதன் சஞ்சாரம் ஜென்ம ராசியில் ஆரம்பிக்கிறது. ராசி நாதன் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார்.
பலன்கள்
குருவின் பயணத்தால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். குருவின் பார்வை 4,6,8ஆம் வீடுகளின் மீது விழுவதால் வீடு, சொத்து வாங்கலாம். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நோய்கள் நீங்கும்.
வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயும் பிள்ளைகளாலும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச்செல்ல நன்மைகள் நடைபெறும்.
வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுத சரியான நேரம் வெற்றிகள் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். நோய்கள் வெளிப்பட்டு நீங்கும்.
மருத்துவ செலவுகளும் வரும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் சமையல் அறையில் நெருப்பு, கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.
சொத்து பாகப்பிரிவினையால் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வருட இறுதியில் சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது.
இந்த ஆண்டு மறக்காமல் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யவும். மாதந்தோறும் அமாவாசை பவுர்ணமி நாட்களில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.