2020 சனி பெயர்ச்சியில் இந்த ராசிக்கு ஏழரை சனி! யாரை ஆட்டிப்படைக்க போகின்றார் தெரியுமா!

0

குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி. குரு பார்த்த இடம் விருத்தி சுபம். சனி பார்த்த இடம் பாழ் தோஷம் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.

சனிபகவான் பார்க்கும் இடங்கள் பாழாகும் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது.

சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார்.

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் திகதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார்.

சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மகரம் ராசியில் அமரப்போகும் சனிபகவான் மீனம், கடகம், துலாம் ராசிகளை பார்க்கிறார்.

சனியானவர், கருணாமுர்த்தியாவார். அவர் அளவற்ற செல்வமும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அவரவர் வினைக்கேற்ப வாரிவழங்குவதில் வல்லவர்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் ராசிக்கு 2ஆம் இடத்தில் கோச்சாரத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் பொருளாதார நெருக்கடி தேவையற்ற பிரச்சனைகள் வார்த்தைகளால் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும்.

ஜாதகத்தில் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, களத்திரகாரகன் சுக்கிரன் ஆகிய விஷயங்கள் சரியாக இல்லாதபோது இல்வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுகின்றது.

சிந்தனை, வாக்கு, மனம் போன்ற அமைப்புக்கள், சரியாக இல்லாததால் காதல், கலப்புத் திருமணம் செய்து கொள்கிறார்கள். புத்திர தோஷம் காரணமாக புத்திர பாக்கியமும் காலதாமதமாகிறது.

கணவன் மனைவியிடையே ஓர் ரசனை இல்லாத உடலும் மனமும் ஒன்றாத ஒரு கட்டாய வாழ்க்கை வேண்டா வெறுப்பாக வாழ வேண்டிய வாழ்க்கை அமைந்து விடுகிறது.

சனி பகவான் கன்னி லக்ன காரர்களுக்கு ஜாதகத்தில் சனி 5ஆம் வீடான மகரத்தில் இருந்து களத்திர ஸ்தானமான 7ஆம் வீடான மீனத்தை மூன்றாம் பார்வையாகவும், தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2ஆம் வீடான துலாம் ராசியை பத்தாம் பார்வையாக பார்ப்பதால் கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவுகளிடையே சிக்கல், பிரச்னைகள், மனக் கசப்பு, வாக்குவாதம், நெறிமுறை தவறிய வாழ்க்கை, விவாகரத்து, ஜீவனாம்ச வழக்கு, தன் வாயாலே கெடுவது, அற்ப சிநேகிதம் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு இந்த 5ஆம் இடத்தில் இருக்கும் சனி காரணமாகிறார்.

சனி எங்கு இருந்தால் பாதிப்பு
சனி பெயர்ச்சியின் போது ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை அளிப்பார்.

ஒருவரது ஜென்மராசிக்கு 12, 1, 2, ஆகிய ராசி வீடுகளில் தலா இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கும் காலம் ஏழாரை சனி காலமாகும்.

2020 சனி பெயர்ச்சியில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி காலமாகும். ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 7ஆம் இடத்தில் கண்டக சனி, 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

மகரம் கும்பம் பாதிப்பு இல்லை
மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் எல்லாம் கிடைக்கும். காரணம் மகரம், கும்பம் சனியின் ஆட்சி வீடு.

அதே போல ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.

பணவரவு குடும்ப பாதிப்பு
குடும்பத்தில் உள்ள சனியால் நிறையப் பணம் வரும் அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.

குடும்ப ஸ்தானம் என்பதால் குடும்ப வாழ்க்கை பாதிக்கும். 5ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார்.

புத்திர தோஷம் ஏற்படும். 7ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும். 8ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.

பணக்காரர் ஆகும் வாய்ப்பு
10ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார். 10ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.

12ல் உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு ஏற்படும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை ஏற்படும்.

12ஆம் இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், பாதிப்புகள் குறைந்து நன்மைகள் ஏற்படும்.

தெய்வ அனுகூலம்
சனிபகவான் ராசிக்கு ஏழாவது வீடான மகரத்தில் அமர்ந்து தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும்.

செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மாற்றம் முன்னேற்றம்
இடமாற்றம் ஏற்படும் ஏழுக்குடையவன் ஏழாம் வீட்டில் இருப்பதால் திருமண தடைகள் ஏற்பட்டு திருமணம் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சனி பார்வை நேராக ராசியின் மீது விழுவதால் நோய்களை வெளிப்படுத்துவார். பயணங்களில் கவனமாக இருக்கவும்.

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

பார்வையால் அதிர்ஷ்டம்
நான்கு ஐந்தாம் அதிபதி சனி தனது பத்தாம் பார்வையால் துலாம் ராசியை பார்க்கிறார். நீதி, நேர்மை, நாணயமாக இருப்பீர்கள். நினைத்தது நடக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடியும்.

ஆட்சிப்பெற்ற சனியின் பார்வையால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். முன்னேற்றமான மாற்றம், வெளிநாடு பயணம் ஏற்படும். நீதித்துறையை சார்ந்தவர்களுக்கு யோகமும் முன்னேற்றமும் அமையும்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்து சென்று தொழில் செய்வீர்கள்.

ஆட்சி பெற்ற லாப சனி பார்வை
லாப ஸ்தானத்தில் அமரப்போகும் சனி பகவானால் லாபமும் பொருள் வரவும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். வெற்றிகரமான தகவல் வரும் பாராட்டுக்கள் குவியும்.

ஆற்றல் அதிகரிக்கும். சனியின் மூன்றாம் பார்வை ராசி மீது விழுவதால் சில அழுத்தங்கள் ஏற்படும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்டதை ஸ்கெட்ச் போட்டு செய்து முடிப்பீர்கள்.

லாப சனியால் வருமானம் குவியும். ராசிக்கு எட்டில் சனி விழுவதால் அலைச்சலை கொடுத்து பிரச்சினையை நிவர்த்தி செய்வார். லாபமும் வருமானமும் குவியும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். மூத்த சகோதரர்களினால் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு பாசிட்டிவ்தான் அதிகம் நடக்கும் நெகட்டிவ் நடக்காது. காரியத்தடை விலகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article260 பேருடன் போட்டியிட்டு உலகளவில் சாதனை படைத்த ஈழத்தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு! குவியும் வாழ்த்துக்கள்!
Next articleதமிழர்கள் மறந்து போன இரத்தக் குடி வைத்தியம்! ஈழத்தில் மறையாமல் இருக்கும் அதிசயம் !